ஆல் பாஸ் இல்லை ! ஆல் பெயில்!
2020 நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா காரணமாக ஆன்லைன் முறையில் 2021 பிப்ரவரி- மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் 11.04.2021 ஞாயிறு இரவு வெளியானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்களால் முடிவுகளை பார்க்க இயலாமல் தவித்தனர். தற்போது அது சரிபார்க்கப்பட்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் தங்களது முடிவுகளை பார்த்ததில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது என்னவென்றால் முதல்வர் அறிவிப்பின்படி அரியர் எல்லாம் ஆல் பாஸ் ஆக்கி போடுவார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெறும் மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் அதாவது 70% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மற்றும் பலருக்கும் முடிவுகளை வெளியிடாமல் பல்கலைக்கழகம் WH என்ற குறியீடு மூலம் முடக்கியுள்ளது. தெளிவான விளக்கமின்றியும் எந்த வித காரணமின்றியும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தடை செய்துள்ளது.
இது குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஆன்லைன் தேர்வில் சீரிய விதிமுறைகளால் கலந்து கொள்ள சிரமமாக இருப்பதாகவும், சிறிதும் கண் அசைக்காமல் சிலை போன்று உட்கார்ந்து எழுத வேண்டும் என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும் வழக்கம்போல நடைபெறும் நேரடி தேர்வுகளை விட இந்த முறை நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
மாணவர்கள் இனிமேல் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் இது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
தேர்வு முடிவுகளால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தது போல் தங்களுக்கு ஆல் பாஸ் ஆக்கி போடுவார்கள் என்று நினைத்து அரியர் மாணவர்களின் அரசர் என்று பேனர் வைத்து கொண்டாடிய மாணவர்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள்.
0 Comments