அண்ணா பல்கலை நேற்று முன்தினம் 17.04.2021 அன்று சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டது அதில் மாணவர்கள் அனைவரும் வருகிற செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதங்களில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததாலும் 70% மாணவர்கள் தோல்வியடைந்ததாலும், மாணவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
இருப்பினும் புத்தகத்தை பார்த்து அப்படியே எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்படாது என்றும் பாடங்களை நன்கு ஆராய்ந்து படித்தால் மட்டுமே விடைகளை சரியாக எழுத முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
பல வகையான வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்படும் ஒருவருக்கு வந்த கேள்விகள் மற்றொருவருக்கு வராது என்றும், மாணவர்கள் தாங்களாகவே சுயமாக சிந்தித்து, புத்தகத்தை பார்த்து குறிப்பு எடுத்து சொந்த நடையில் பதிலளிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் தேர்வு எழுதுவதை ஆன்லைன் மூலமாக தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். குழுவாக அமர்ந்து தேர்வெழுத அனுமதி இல்லை.
( பொறியியல் பாடங்களில் 90% , கணித வினாக்களே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது )
வினாக்கள் வழக்கம்போல கேட்கப்படும் 2 மதிப்பெண்கள் மற்றும் 16 மதிப்பெண்கள் வகையில் குறுவினா மற்றும் நெடுவினா வகையில் கேட்கப்படும்.
இருப்பினும் ஆன்லைன் தேர்வை விட இது எளிதாக இருக்கும் என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து அவதியடைந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிமுறைகளைத் தேர்வுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் தனியறையில் அமர்ந்து மொபைல் அல்லது லேப்டாப் மூலம் தேர்வுகள் எழுத வேண்டும், தேர்வு எழுதும் அறையில் யாரும் இருக்கக் கூடாது, சந்தேகம் வரும்படி சத்தம் எதுவும் கேட்கக்கூடாது, தேர்வு எழுதும் நேரம் முழுவதும் கேமராவை மட்டுமே பார்க்க வேண்டும் போன்ற வழிமுறைகளைக் கூறியிருந்தது.
ஆன்லைனில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அதில் பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவற்றுள் முக்கியமானது கல்வி. பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகளை ரத்து செய்தும், ஆல் பாஸ் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு சில பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தும் வேறு வழி இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் இன்டர்னல் மதிப்பெண்கள் மற்றும் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாஸ் செய்யவும் அறிவித்தது தமிழக அரசு. மேலும், கல்லூரித் தேர்வுகளில் ‘அரியர்’ வைத்திருக்கும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் உறுதி என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த முடிவு தேசிய அளவில் கல்வியாளர்களிடையே கடும் எதிர்ப்பைப் பெற்றது. தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘அரியர்’ மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிட்டன.
தமிழக அரசின் ஆல் பாஸ் அறிவிப்பு தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது எனப் பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC - University Grants Commission) அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (AICTE) கண்டனம் தெரிவித்திருந்தன. அதனால் அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கும் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் தமிழக அரசின் 'அரியர் ரத்து' அறிவிப்பை ஏற்க முடியாது, அடுத்த எட்டு வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு 2020-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரை நடத்தப்பட்டன. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கெடுத்தனர். ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்தத் தேர்வுக்கென பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டது. மொத்த பாடங்களையும் உள்ளடக்கியது இந்தத் தேர்வு என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் ஏப்ரல் 11 அன்று வெளியாகியிருக்கும் தேர்வு முடிவுகள் மாநிலம் முழுவதும் உள்ள பேராசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவுகளில் நிறைய மாணவர்களது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது அதன் காரணத்தின் அடிப்படையில் WH99, WHRX, WH1 எனப் பல வகைகளில் வகைப்படுத்தப்படும். இதில் WH1 என்பது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி வைக்கப்படும். தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலரது தேர்வு முடிவுகள் இந்த WH1 அடிப்படையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிமுறைகளைத் தேர்வுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் தனியறையில் அமர்ந்து மொபைல் அல்லது லேப்டாப் மூலம் தேர்வுகள் எழுத வேண்டும், தேர்வு எழுதும் அறையில் யாரும் இருக்கக் கூடாது, சந்தேகம் வரும்படி சத்தம் எதுவும் கேட்கக்கூடாது, தேர்வு எழுதும் நேரம் முழுவதும் கேமராவை மட்டுமே பார்க்க வேண்டும் போன்ற வழிமுறைகளைக் கூறியிருந்தது.
மாணவர்கள் தேர்வு
மாணவர்கள் தேர்வு
இந்த வழிமுறைகளை மீறும் பட்சத்தில் அது முறைகேடாகக் கருதப்படுகிறது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணையதளக் கோளாறு காரணமாகத் தேர்வு எழுதும் செயலியில் இருந்து வெளியேறினாலும் அதுவும் முறைகேடாகவே கருதப்படுகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பேசும் போது, "எங்க வகுப்பில் இருக்கிற பாதி மாணவர்களுக்கும் மேல் முடிவுகளை நிறுத்தி வச்சுருக்காங்க. என்னென்னவோ காரணங்கள் போட்டிருக்கு. நிறைய பேர் முறைகேடு செஞ்சாங்க, அதுனாலதான் நிறுத்தி வச்சிருக்கோம்னு சொல்றாங்க. இப்போ என்ன பண்றதுன்னு தெரியல" எனக் கூறுகிறார். மற்றொரு மாணவர் பேசும் போது, "எனக்கும் முறைகேட்டுல ஈடுபட்டதால தேர்வு முடிவுகளை நிறுத்தி வெச்சிருக்கு போட்டிருந்தாங்க. ஆனால் நான் இது வரைக்கும் அரியரே வச்சது இல்ல. இந்த முடிவுகள் ரொம்ப மன உளைச்சலைத்தான் கொடுக்குது" என்றார்.
0 Comments